''சுத்தம் சுகம் தரும்'' Print E-mail
Friday, 21 June 2013 10:00

''சுத்தம்  சுகம் தரும்''

1. நிறைவான குளியல்

தினமும் குளிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தவேண்டும். என்னதான் அவசரமாக இருந்தாலும், முகம்-கை-கால் மட்டுமே கழுவிக்கொண்டு செல்லவிடக் கூடாது. காது மடல்கள், மூக்கு மற்றும் உடல் முழுவதும் சோப் மற்றும் பிரத்யேகக் குளியல் நாரினால் தேய்த்து நிறையத் தண்ணீர் விட்டுக் குளிக்கக் கற்றுக்கொடுங்கள். தினமும் இரண்டு வேளை குளித்தால் மிகவும் நல்லது. ஈரத் துணியில் பாக்டீரியா வேகமாக வளரும். குளித்ததும் ஈரம் போகத் துடைத்து, துவைத்த உள்ளாடைகளை அணிவியுங்கள்.. வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டுக் குளிக்கவைக்கவும்.

2. கை கழுவுதல்

கைகளில் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி ஜெல் போட்டு குறைந்தது 20 விநாடிகள் கழித்து கையைக் கழுவக் கற்றுக்கொடுங்கள்.  சாப்பிடும்போதும், உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும், மூக்கில் சளித் தொந்தரவு இருந்தால் மூக்கைத் தொட்டதும், மருந்துகளைத் தொடுவதற்கு முன்பும் பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும் என்று வலியுறுத்துங்கள். நக இடுக்குகள் கிருமிகள் நன்கு வளர ஏற்ற இடம்.  நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்.

3. பல் துலக்குதல்

பல் சொத்தை என்பது குழந்தைகள் மத்தியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. தினமும் இரண்டு முறை பல் துலக்கக் கற்றுக்கொடுக்காததே இதற்குக் காரணம். குழந்தைகளை பல் துலக்கச் செய்வதே பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சவால்தான். பள்ளிக்குப் புறப்படும் கடைசி நேரத்தில் அரக்கப்பரக்க குழந்தைகளை எழுப்பி, பரபரவென, பற்களைத் துலக்கி அனுப்பிவிடுகின்றனர். குழந்தை களை சீக்கிரத்திலேயே எழுந்திருக்கவைத்து, நிதானமாகப் பல் துலக்கவையுங்கள். பல்லின் முன், பின், மேல், கீழ் என எல்லாப் பக்கங்களிலும் துலக்கச் செய்வதன் மூலம் பெப்பர்மின்ட் வாசம் தூக்கும். பளிச் எனப் பற்களும் பிரகாசிக்கும்.

4. காயங்களை மூட வேண்டும்

காயங்கள் மூலம் கிருமிகள் உடலுக்குள் மிக எளிதில் புகுந்துவிடும். காய்ந்துவரும் புண்ணை பிய்க்கும் பழக்கமும் குழந்தைகளுக்கு இருக்கும். இதைத் தவிர்க்க, காயம்பட்டவுடன் முதலில் ஆன்டிசெப்ட்டிக் திரவத்தால் காயத்தை சுத்தம்செய்து, காயங்களை பேன்டேஜ் போட்டு மூட வேண்டும். காயங்கள் மீது கைபடக் கூடாது என்று அறிவுறுத்துங்கள். பள்ளிக்கூடம், வெளி இடங்களில் குழந்தைக்கு எந்த சிறிய காயம் பட்டாலும், உடனடியாகத் தெரிவிக்கும்படி குழந்தைகளைப் பழக்குங்கள்.

5. தும்மல்

தும்மல், இருமல் வந்தால், நன்கு உலர்ந்த துணி, அல்லது டிஷ்யூவால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். ஒருவேளை தும்மல் ஏற்படும்போது கையில் துணி ஏதும் இல்லை என்றால், முழங்கையின் முன்புறத்தால் மூடிக்கொள்ளச் சொல்லலாம். ஏனெனில், கையில் தும்மல் பட்டால், அதில் கிருமிகள் பரவி, மற்ற குழந்தைகளைத் தொடுவதன் மூலம் இந்த கிருமி மற்றவர்களுக்கும் பரவும். ஆனால், முழங்கையால் மூடித் தும்மும்போது கிருமியானது குறிப்பிட்ட சிறிய பகுதியில் மட்டுமே இருக்கும். வீட்டுக்குச் சென்றதும் குளித்தால் அந்தக் கிருமிகளும் இல்லாமல் போய்விடும்.

சுத்தம், சுகாதாரம் பேணுவோம் நோய்களை தவிப்போம். இன்பமாக வாழ கற்றுக்கொள்வோம்.


 
Coffee, Tea இரண்டுமே நல்லதுதான் Print E-mail
Monday, 30 September 2013 11:09

Coffee, Tea இரண்டுமே நல்லதுதான் என்று ஆராய்சிகளில் அறிந்துள்ளார்கள். டாக்டர் . சௌந்திரபாண்டியன் அவர்களின் ஆய்வு இது.

உலகில் மிக அதிகம் பேர் அருந்தும் பானம், டீதான். இதில், பல வகைகள் இருந்தாலும்... மூன்றுதான் முக்கியம். கறுப்பு டீ (Black Tea), பச்சை டீ (Green Tea) மற்றும் வெள்ளை டீ (White Tea). இந்த மூன்றுமே ஒரே செடியில் விளையும் இலைகள்தான். அந்த இலைகளை நாம் என்ன செய்கிறோம் என்பதை வைத்தே டீயின் நிறம் மாறுகிறது. சற்று வெள்ளி நுனிகளையுடைய இளம் இலைகளைப் பறித்து, எவ்வித பதனிடு முறைகளும் இன்றி, வெறுமனே நிழலில் உலர்த்திப் பொடி செய்யும் டீ... வெள்ளை டீ. இதில் கேஃபின் குறைவாகவும், ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மிக அதிகமாகவும் இருக்கும். வெள்ளை டீ என்று பெயர் இருந்தாலும், கொதிக்க வைத்தால், சற்று மஞ்சள் நிற திரவமாகவே இருக்கும். விலை மிக அதிகமான இந்த டீ, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது.

பச்சை டீதான் மிகவும் பிரபலமான டீ. முக்கியமாக எங்களைப் போன்ற டாக்டர்கள்தான் இதை மிகவும் விளம்பரப்படுத்த உதவியவர்கள். டீ இலைகளை நீராவியில் கொதிக்க வைத்து, உலர வைத்து, பின்னர் பொடி செய்தால் கிடைப்பது பச்சை டீ.

பெரும்பாலானோர் குடிக்கும் டீ, கறுப்பு டீதான். உலர வைத்த இலைகளை நொதித்தல் முறையில் பதனிட்டு பொடி செய்வதே இந்த முறை. இதில்தான் அதிக கேஃபினும் குறைவான ஆன்டி - ஆக்ஸிடன்ட்ஸும் இருக்கும். ஆனாலும், மருத்துவ குணங்களில் இதுவும் சளைத்ததல்ல.

பொதுவாக டீயில் இருக்கும் கேஃபின் அளவு காபியில் உள்ளதைவிட பாதிதான். ஒரு கப் காபியில் 80 மி.கி கேஃபின் உண்டு. இதுவே ஒரு கப் கறுப்பு டீயில் 40 மி.கி; பச்சை டீயில் 25 மி.கி; வெள்ளை டீயில் 15 மி.கி-தான்.

டீயின் அற்புத குணங்களுக்கு அதில் உள்ள சில அரிய ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்தான் காரணம். அவற்றில் ஈஜிஸிஜி (EGCG) மிக முக்கியமானது. இந்த ஈஜிஸிஜி-க்கு பல வகை புற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு - குறிப்பாக பெண்களின் மார்பகப் புற்றுநோய் மற்றும் முட்டை - சினைப்பை புற்றுநோய். இவை தவிர வாய், இரைப்பை, குடல், கணையம், ஈரல், நுரையீரல், தோல் போன்ற உறுப்புகளின் புற்றுநோய்களும் இந்த டீக்கு அடங்கும். நுரையீரல் புற்றுநோய் தடுக்கப்படும் என்பது தவிர, சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்காமல் பாதுகாக்கும் என்றும், புற்றுநோய்களுக்குத் தரப்படும் கதிர்வீச்சு சிகிச்சையிலிருந்து பாதுகாப்பு கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஈரல் புற்றுநோயைத் தடுப்பதோடு, மதுவினால் விளையும் ஈரல் பாதிப்புகளையும் டீ கட்டுப்படுத்த வல்லது.

ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்க முடியும் என்றும், அதனால் மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு, பக்கவாதம் முதலிய வியாதிகளைத் தடுக்க முடியும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

காபியைப் போலவே, முதியவர்களைத் தாக்கும் மூளை - நரம்பு பாதிப்புகளான அல்ஸைமர் வியாதியையும், பார்க்கின்ஸன் வியாதியையும் டீயால் கட்டுப்படுத்த முடியும். 'மெட்டபாலிக் சிண்ட்ரோம்' என்று அழைக்கப்படும் நோய்க்கூட்டு, சர்க்கரை நோயின் முன்னோடி என்று முன்பு குறிப்பிட்டோம். இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் டீக்கு உண்டு. அதனால் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும் என்பதும் இனிப்பான செய்திதானே? சர்க்கரை நோயினால் கண்ணில் ஏற்படும் புரை நோயும் டீ சாப்பிடுவதால் தடுக்கப்படும் என்பது கூடுதல் தகவல்.

டீயால் உடல் பருமனைக் குறைக்க முடியும் என்பது ஒரு முக்கிய செய்தி. குறிப்பாக, உடல் பருமனைக் குறைக்கும் வைத்திய முறைகளில் பச்சை டீக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தினமும் 4 - 6 கப்கள் பச்சை டீ குடித்தால்... உடல் எடை குறையும் என்கிறார்கள்.

காபியைச் சூடாக சுவைத்தால் நல்லது. ஆனால், டீயை மிகவும் சூடாகச் சுவைத்தால்... உணவுக் குழாயில் புற்றுநோய் வரலாம். ஆகவே, டீயை சற்று ஆறிய பிறகே குடிக்க வேண்டும்.

 
நண்பர்களே இது மருத்துவக் குறிப்பு: தேங்காய் எண்ணெய்யா Print E-mail
Sunday, 19 June 2016 11:21

நண்பர்களே இது மருத்துவக் குறிப்பு:

தேங்காய் எண்ணெய்யா... அது முழுக்க கொலஸ்ட்ரால்ப்பா! சாப்பிடவே கூடாது’ என்ற வதந்தியை யார் கிளப்பிவிட்டது எனத் தெரியவில்லை. பலரும் நம் பாரம்பரிய தேங்காய் எண்ணெயை உணவில் பயன்படுத்துவதைக் கிட்டத்தட்ட நிறுத்தியேவிட்டனர். வெளிநாட்டு இறக்குமதியான சன்ஃபிளவர் ஆயில், கார்ன் ஆயில், ரைஸ் பிராண்ட் ஆயில், ஆலிவ் ஆயில்தான் சிறந்தது என்று பயன்படுத்திவருகிறோம். இறக்குமதியின் ஆதிக்கத்தால், உடலுக்கு ஆரோக்கியம்தரும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதையே குறைத்துவிட்டோம். “உண்மையில், தேங்காய் எண்ணெய் உடல்நலத்துக்குக் கெடுதியா?” என்று மருத்துவர்களிடம் கேட்டால், “இல்லை” என்கின்றனர். தேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்துக்கொள்வதிலும், வெளிப்புறமாகத் தோலில் பூசுவதாலும் பல பலன்கள் இருக்கின்றன. உடலுக்கு நலம் தருவதோடு, சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது தேங்காய்.*தேங்காயில் 90 சதவிகிதம் சாச்சுரேட்டட் வகை கொழுப்பு இருக்கிறது. இது உடலுக்குப் பல்வேறு நற்பலன்களைத் தருகிறது.

*தேங்காய் எண்ணெயை முகத்திலும் லேசாகத் தேய்த்துவந்தால், முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும். முதுமையானவர்களுக்கு இருக்கும் தோல் சுருக்கம் (Wrinkles) தற்போது, பலருக்கு இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. தோல் சுருக்கத்துக்குச் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களைப் பயன்படுத்துவதைவிட, தேங்காய் எண்ணெயை முகத்தில் தேய்த்துவந்தாலே சுருக்கங்கள் வருவது தடுக்கப்படும்.

*தேங்காய் எண்ணெயை தினமும் சமையலில் ஏதாவது ஒரு வகையில் சேர்க்க வேண்டும். ஆனால், டீப் ஃபிரை மற்றும் துரித உணவுகளில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் எந்தப் பலனும் இருக்காது. நம் வழக்கமான சமையலில், சாம்பார், கூட்டு, கீரை, பொரியல் என ஏதோ ஒரு வகையில் தினமும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

- நன்றி:சஞ்சிகைஒன்றில் ஆயுர்வேத டாக்டர் ரெபேக்கா.

 
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Print E-mail
Tuesday, 15 July 2014 08:48

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒத்துக்கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.

வைட்டமின் , சி, :

வைட்டமின் (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன் மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.

ப்ரோபயாட்டிக்:

தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோகுளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோபயாட் டிக் உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. அவை, அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான, வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக்கள் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.

துத்தநாகம்:

இது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவுகிறது. துத்தநாக பற்றாக்குறை, உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பாதிப்பதோடு, கடும் பற்றாக்குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போக வைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

This message has been truncated

 
நண்பர்களே, ஆரோக்கியமாக இருப்போம். Print E-mail
Sunday, 19 June 2016 11:27

நண்பர்களே, ஆரோக்கியமாக இருப்போம்.

பீட்டா கெரொட்டீன் சத்து அதிகளவு உள்ள, குறைந்த அளவு கலோரி கொண்ட கேரட்டை தினமும் ஒன்று பச்சையாக சாப்பிட்டு வந்தால்... உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ளலாம்; ஆரோக்கியமும் கிடைக்கும்.  தொகுத்தவர்: பஞ்சாடசரன் சுவாமிநாத சர்மா

 
<< Start < Prev 21 22 23 24 25 26 27 28 29 30 Next > End >>

Page 28 of 45