சிவபெருமானை அழைக்காமல்....... Print E-mail
Sunday, 11 October 2015 14:39

'சிவபெருமானை அழைக்காமல், பார்வதியின் தந்தை தட்சன் யாகம் நடத்தினான். அதைத் தட்டிக் கேட்கச் சென்றாள் பார்வதி. தட்சன் அவளையும் அவமதித்தான். கோபமடைந்த சிவன், தனது அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி யாகத்தை அழிக்க அனுப்பினார். வீரபத்திரர், 32 கைகளுடன் விஸ்வரூபம் எடுத்து, யாககுண்டத்தை அழித்து, யாகத்தின் பலனை ஏற்க வந்திருந்த தேவர்களை விரட்டியடித்தார். 32 கைகளை உடைய வீர பத்திரரையே இங்கு காண்கிறீர்கள்.

 
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் மகத்துவம்: Print E-mail
Sunday, 11 October 2015 14:41

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் மகத்துவம்:

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் மற்ற விநாயகர்களில் இருந்து மாறுபட்டவர். மலைக்கோயில் குன்றின் மீது, இவரது சிலை வடிக்கப்பட்டுள்ளது. மலையில் செதுக்கப்பட்ட இறைவடிவங்களுக்கு மந்திர சக்தி அதிகம் இருப்பதாக ஆகமசாஸ்திரம் கூறுகிறது. மற்ற விநாயகர்களுக்கு தும்பிக்கை நீங்கலாக நான்கு கரங்கள் இருக்கும். இவருக்கோ இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. பத்மாசனமாக காலை மடித்து யோகநிலையில் இருந்து, யோகபலன்களை வாரி வழங்குகிறார். இவருக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "தண்டனை'. யாரையும் தண்டிக்கும் எண்ணம் இல்லாமல், தவறுகளை மன்னிக்கும் குணம் உள்ளவர் என்பதால் பாச அங்குசம் ஏந்தாமல் இருக்கிறார். சடைமுடி, கங்கை, மூன்றுகண், இளம்பிறை ஆகியவற்றைக் கொண்டு சிவ அம்சத்துடன் விளங்கும் இவர், கற்பக மரம் போல கேட்டவரம் அருள்பவராக விளங்குகிறார். இவரைத் தரிசித்தால் பிறர் செய்த தவறுகளை மன்னிக்கும் குணம் வளரும்.
‘’ஆன்மிக தகவல்’’ என்ற தொகுப்பில் திரட்டியது.

 
“இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் Print E-mail
Monday, 12 October 2015 13:36

நண்பர்களே, அறிவோம் தெளிவோம்:

“இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். ஆதலால் நாம் இருக்கும் இடத்திலேயே வணங்கினால் போதாதா? ஆலயத்துக்குச் சென்றுதான் வணங்கவேண்டுமா?” என்று வினவுபவர் பலருண்டு.
பசுவின் உடம்பு முழுவதும் பால் நிறைந்நிருக்கின்றது. பாலைப் பெற முயலுகின்ற ஒருவன் அதன் கொம்பையோ, காதுகளையோ, வாலையோ வருடினால் பால் கிடைக்குமா? எனவே, பால் பெற விரும்புபவன் பசுவின் மடியை வருடிப் பால் பெறுவது போல, இறைவனின் அருளைப்பெற விரும்;புவோன் ஆலயத்திற்குச் சென்று இறைவன் திருமுன் நின்று வழிபட்டு திருவருளைப் பெறவேண்டும்.
-திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

 
கோயில் சுவர்களில் வெள்ளை, Print E-mail
Sunday, 11 October 2015 14:43

கோயில் சுவர்களில் வெள்ளை, காவி வர்ணம் இருப்பதன் நோக்கம் என்ன?

வெண்மை தூய்மையின் சின்னம். காவி தியாகத்தின் அடையாளம். கல்வி கற்பவன் தூய உள்ளத்தோடு ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக சரஸ்வதி வெண் தாமரையிலு<ம், செம்மையான(நேர்மை) வழியில் பொருள் தேட வேண்டும் என்பதற்காக திருமகள் செந்தாமரையிலும் இருப்பதையும் பார்க்கலாம். பக்திக்கு தூய்மையும், நேர்மையும் அவசியம் என்பதே இந்த இரு வேறு வர்ணங்கள் அடிப்பதன் நோக்கம். . இப்பண்புகளை நம்மிடம் வளரச் செய்யும் இடமாக கோயில்கள் திகழ்கின்றன.

 
பொய் பேசினால் தோஷம் வரும் Print E-mail
Monday, 12 October 2015 13:37

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

பொய் பேசினால் தோஷம் வரும். நம்மையறியாமலேயே பாவங்கள் சேரும். எப்படிப் பாவங்கள் சேரும் தெரியுமா? பஞ்சமகா பாதகங்கள் பெரிது என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கெல்லாம் கூடப் பரிகாரம் உண்டு; கழுவாய் உண்டு என்கிறது புறநானூறு.

வேதம்வல்ல அந்தணர்களைக் கொல்லக்கூடாது; பெண் கொலை புரிவது பாவம்; குழந்தைகளை அழிப்பது கொடும் பாவம். ஆனால் இந்தப் பாவங்களையெல்லாம் விடக் கொடுமையானது பொய் சொல்வது என்கிறது திருப்பனந்தாள் புராணம்.

பொன்ற வான்அந்தணர் பெண் புதல்வரைக்
கொன்ற பாதகத்தில் கொடும் பொய்
என்பது செஞ்சடை வேதிய தேசிகர் வாக்கு.

 
<< Start < Prev 21 22 23 24 25 26 27 28 29 30 Next > End >>

Page 29 of 39