தனக்கு மேல் ஒரு தலைவன்........ Print E-mail
Sunday, 11 October 2015 12:02
Moderninternational Hinduculture

நண்பர்களே, அறிவோம்,தெளிவோம்:

தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவர் பிள்ளையார். அதனால்தான் அவருக்கு விநாயகர் என்று திருநாமம். சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று ஒளிப்பொருளைக் குறிக்கும் முக்கண்கள், ஐந்தொழில்களை உணர்த்தும் ஐந்து கரங்கள்... என பிரணவ தத்துவமாகவே திகழும் அந்த நாயகனைக் கொண்டாடும் திருநாள்தான் விநாயகர் சதுர்த்தித் திருநாள்.

இந்தப் புண்ணிய தினத்தில் விநாயகரை வழிபடுவதால், நமது வாழ்வு மட்டுமல்ல, நம் சந்ததியினர் வாழ்வும் செழிக்கும்.

ஆவணி மாதம், ஹஸ்த நட்சத்திரமும் சுக்லபட்ச சதுர்த்தியும் கூடிய நன்னாளில் வருவது விநாயகர் சதுர்த்தி. இந்தத் திருநாளில்தான் பிள்ளையார் அவதரித்தார்.ஒருமுறை, ஈசனும் அம்பாளும் திருக்கயிலாயத்தில் இருக்கும் சித்திர மண்டபத்துக்கு எழுந்தரு ளினார்கள். அங்கேயுள்ள மந்திர மூலங்களின் மீது தங்களின் திருப்பார்வையை செலுத்தினார்கள். அப்போது ஓர் ஒளி வட்டமும் அதிலிருந்து தண்டமும் தோன்றின; தண்டம் ஒலியாக தழைத்தது. இந்த ஒளிஒலி இரண்டிலும் இருந்து உதித்த திருவடிவே, வரத கணபதி. ஒளி வட்டம் பிந்து; தண்டம் (ஒலி) நாதம். பிந்து மற்றும் நாதத்தில் இருந்து அகர, உகர, மகரம் பிறக்கும். இந்த மூன்றும் சேர்ந்து 'ஓம்’ என்று ஒலிக்கும். ஆக, 'ஓம்’காரம் எனும் பிரணவத்தின் உருவமே பிள்ளையார்.

அவரை, அவர் அவதரித்த திருநாளில் வழிபடுவதால், அனைத்து கடவுளரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

-நன்றி. ஆன்மிக சஞ்சிகை.: தொகுத்தவர்: பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தின் சார்பில்.

 
கணபதி காயத்ரி Print E-mail
Sunday, 11 October 2015 12:04

Moderninternational Hinduculture

கணபதி காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ!

தந்நோ தந்தி: ப்ரசோதயாத்!

எவர் நம்மை எல்லா விதத்திலும் தூண்டுகிறாரோ, எவவர் வளைந்த யானையின் தும்பிக்கையோடு கூடிய முகத்தைக் கொண்டவரோ, எவர் அனைத்தையும் கடந்த மூலப்பொருளாக விளங்குபவரோ, அவரை தியானித்து அறிவோம்.

 
விநாயகப்பெருமானின் ... Print E-mail
Sunday, 11 October 2015 12:06
Moderninternational Hinduculture
September 16 at 2:49pm · நண்பர்கள் , அன்பர்கள் அனைவர்க்கும் விநாயகப்பெருமானின் அனுக்ரகம் கிடைக்க வேண்டும் என்று மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம் வினாயகபெருமானை வணங்கி கேட்டுக் கொள்கிறது.
 
கணபதி தியான ஸ்லோகம் Print E-mail
Sunday, 11 October 2015 12:05
Moderninternational Hinduculture

கணபதி தியான ஸ்லோகம்

ஒம் கஜாநநம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பு பலஸார பக்ஷிதம்

உமாசுதம் சோக விநாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

''ஆனை முகத்தனை, பூத கணங்களால் வழிபடப்படும் இறைவனை, விளாம்பழம், நாவல் பழம் ஆகியவற்றின் சாரத்தை அருந்துபவனை, உமை மைந்தனை, துயரங்களை நீக்கும் காரணனை வணங்குகிறேன். தடைகளைப் போக்கும் விக்னேஸ்வரரின் திருவடியை வணங்குகிறேன்.

 
'அறிவியல் என்ன கூறுகிறது? Print E-mail
Sunday, 11 October 2015 12:07

இன்றைய சிந்தனை:

''அறிவியல் என்ன கூறுகிறது?

ஒலியில் இருந்து ஒளியும், ஒளியில் இருந்து சக்தியும் தோன்றுவதாகத்தானே கூறுகிறது. சக்திதான் உலகத்தை இயக்குகிறது. ஆக, இயக்கத்தின் காரணமான சக்திக்கும், சக்திக்குக் காரணமான ஒளிக்கும் மூலம், ஒலியாகத் திகழும் ஓங்காரம். மூலப் பொருளான அந்த ஓங்காரமே பிரளயத்துக்குப் பின்னும் பிரபஞ்சத்தில் எஞ்சி இருப்பது! எனில், அந்த ஓம்கார ஸ்வரூபனான கணபதிதானே அனைத்துக்கும் அதிபதி! அவரது திருவடியை அனுதினம் பணிவோம்!

கணபதி என்றிட... கவலைகள் தீருமே!

 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 7 of 29